Types of Business Debts
கடன் வகைகள் அடமானமில்லாத கடன் ( Unsecured Loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர் . பி . ஐ . விதி . இந்த விதி காரணமாக , 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும் . ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும் . தவிர , சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் ( ஷிமிஞிஙிமி ) சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் ( Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள் . ஆனால் , இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும் . இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள் . அடமானக் கடன் ( secured Loan ) (secured loan) ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில் , அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது . அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற ...