How To Get Mudra Loan From Government
முத்ரா கடன் திட்டம் இது குறு , சிறு உற்பத்தி , சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ .10,00,000/- வரை ( பத்து லட்சம் ) சொத்து பணயம் இல்லாத வங்கி கடன் பெறும் திட்டம் ஆகும் . சிறு தொழில்களுக்கு நமது நாட்டில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை . நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள் , வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை ; இதில் , 4 சதவீத தொழில்களே , வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என , மத்திய அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது . வங்கிக்கடன் கிடைக்காததால் சிறுதொழில் செய்பவர்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடுகின்றனர் . அங்கு , அதிக வட்டியில் கடன் பெறுவதால் , இத்தொழில்களால் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியவில்லை என்பதை அறிந்த மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ‘ முத்ரா ’ வங்கி திட்டத்தை அறிவித்தது . இதன்மூலம் சிறு , குறு , நடுத்தர தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளித்துவிடும் என அறிவிக்கப்பட்டது . ...