What are Must Be in the Business Plan
பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும் ? நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும் . முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள் , நீங்கள் யார் , என்ன செய்து கொண்டிருந்தீர்கள் , இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும் . தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எப்படித் தெரியும் , அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள் ; உங்களுக்கான மூலப் பொருட்கள் எங்கு கிடைக்கும் ; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும் . இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும் . இதற்கு டி . எஸ் . சி . ஆர் . என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள் . Debt Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி . எஸ் . சி . ஆர் . அதாவது , ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில் , அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக , குறைந்தது ரூபாய்...